fbpx

பூஜைக்கு செல்வதாக கூறிவிட்டு கள்ளக்காதலியுடன் உல்லாசம்..!! கோயில் பூசாரியை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்..!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஜார் பகுதியில் வசித்து வந்தவர் மாரிமுத்து (44). இவர், கோயில் பூசாரியாக இருந்து வந்தார். இவரது மனைவி வினோதா. இவர்களுக்கு 18 வயதில் மகள், 15 வயதில் மகன் இருக்கின்றனர். இந்நிலையில், ஆயுதபூஜையை முன்னிட்டு கோயிலில் பூஜை செய்துவிட்டு வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது மாதா கோயில் பகுதியில் ரத்த வெள்ளத்தில் பூசாரி இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த முரளிதரன் என்பவரது மனைவி தனலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து உதயகுமாருடன் (40) திருமணம் செய்யாமல் குழந்தைகளுடன் கோத்தகிரியில் மாதா கோயில் பகுதியில் உள்ள கோவில் மேடு பகுதியில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கோயில் பூசாரி மாரிமுத்துவுக்கும், தனலட்சுமிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று ஆயுதபூஜை பணிகளை முடித்துக் கொண்டு தனலட்சுமியின் வீட்டிற்கு மாரிமுத்து சென்றுள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை உதயகுமார் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது உதயகுமார் தாக்கியதில் மாரிமுத்து உயிரிழந்தார். பின்னர் வீட்டு வாசலில் உடலை போட்டுவிட்டு அதிகாலை இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த உதயகுமார் மற்றும் தனலட்சுமியை கைது செய்தனர்.

Chella

Next Post

ஹேப்பி நியூஸ்..!! இந்த நிறுவனத்தின் கார் வச்சிருக்கீங்களா..? நீங்கள் இலவசமாக சர்வீஸ் செய்யலாம்..!!

Wed Oct 25 , 2023
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இலவச கார் சர்வீஸ் முகாமை தொடங்கியுள்ளதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இலவச சர்வீஸ் முகாம் நாடு முழுவதும் உள்ள ஹோண்டாவின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப்களில் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் ஜெனரல் கார் செக்கப், பேட்டரி மற்றும் டயர் மதிப்பீடு போன்ற பல சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அக்டோபர் 16ஆம் தேதி முதலே இந்த இலவச முகாம் தொடங்கியுள்ளது. இந்த மாதம் முழுவதும் நடைபெறும் […]

You May Like