fbpx

கூலித்தொழிலாளியின் கள்ளக்காதலியுடன் உல்லாசம்..!! வசமாக சிக்கிய ஜோடி..!! பற்றி எரிந்த தீ..!! பரபரப்பு

கடலூர் மாவட்டம் பாலக்கரையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித் தொழிலாளியான இவர், தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடலூர் மாவட்டத்தில் முருகன் குடியில் அன்பழகன் என்பவரின் மனைவி கவுதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்நாளில் அதுவே கள்ள உறவாக மாறி இருக்கிறது. இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். ஆறுமுகத்தின் நண்பர் உளுந்தூர்பேட்டை அருகே பு.கிள்ளனூரைச் சேர்ந்த வைத்தி என்பவர் அடிக்கடி பார்க்க வந்திருக்கிறார். அப்போது கவிதா உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை ஆறுமுகம் ஆரம்பத்தில் இருந்தே கண்டித்தும், கவிதா அதைக் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் கவிதா, பு.கிள்ளனூர் பகுதிக்குச் சென்று வைத்தியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார். இது தெரிந்ததும் ஆறுமுகம் சம்பவத்தன்று கிள்ளனூருக்கு சென்று தன்னுடன் வருமாறு கவிதாவை அழைத்துள்ளார். அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பெட்ரோலை கவிதா மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார் ஆறுமுகம். இதனை சுதாரித்துக் கொண்ட கவிதாவும், வைத்தியும் அந்த பெட்ரோல் கேனை பிடுங்கி ஆறுமுகத்தின் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார்கள்.

இதில் அலறி துடித்து உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து, அப்பகுதியினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். சம்பவம் குறித்து அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாவையும், வைத்தியையும் கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

7 வயது சிறுமியை ரூ.4.50 லட்சத்திற்கு வாங்கி திருமணம் செய்த 38 வயது வாலிபர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Thu May 25 , 2023
7 வயது சிறுமியை 4.50 லட்சம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி திருமணம் செய்திருக்கிறார் 38 வயது வாலிபர். ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலால் அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்திற்கு உட்பட்டது மணியா. இப்பகுதியைச் சேர்ந்தவர் பூபால் சிங். கடந்த 21ஆம் தேதி அன்று இந்த வாலிபர் 7 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த […]

You May Like