சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் ராயர்பாளையத்தில் வசிப்பவர் செல்வராஜ் (52). இவர் பைனான்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம் என்பரை நேற்றிரவு 9.30 மணி அளவில் வீரகனூர் பஸ் நிலையத்தில் வைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து செல்வத்தை மீட்டு தலைவாசல் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, செல்வராஜை கைது செய்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக போலீஸ் அளித்த தகவலின்படி, செல்வராஜ் பைனான்ஸ் தொழிலுடன் பேன்சி கடையும் நடத்தி வருகிறார். அந்த பேன்சி கடையில் கொலை செய்யப்பட்ட செல்வத்தின் மனைவி சத்யா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது செல்வராஜூக்கும், சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த ரகசிய உறவு செல்வத்துக்கு தெரியவந்தது. உடனே அவர் மனைவியை பேன்சி கடைக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் செல்வாஜூக்கும், சத்யாவுக்குமான கள்ளத்தொடர்பு அதிகமாக இருந்துள்ளது. இதனால் செல்வம், வெறுத்து போய் தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
அப்படி பிரிந்த பின்னரும் செல்வராஜ், சத்யாவை ரகசியமாக சந்தித்து பேசி வந்துள்ளார். இதனிடையே செல்வம், இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக வந்து சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் செல்வத்தை தீர்த்துக்கட்ட செல்வராஜ் முடிவு செய்தார். அதன்படியே வீரகனூர் பஸ் நிலையத்துக்கு பின்புறம் செல்வம் செல்வதை பார்த்து, அவரிடம் வேண்டுமென்றே தகராறு செய்து தீர்த்துக்கட்டி உள்ளார்.
பைனான்ஸ் அதிபர் செல்வராஜ் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். இதில் 2-வது மனைவியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்திருக்கிறார் என்பதும், 3-வதாக செல்வத்தின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, செல்வம் கொலையில் அவரது மனைவி சத்யாவுக்கு தொடர்பு உள்ளதா? என்பதையும் விசாரித்து வருகின்றனர்.