மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய-மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களும் நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டு உபயோக பொருட்கள் பாதிக்கப்பட்டிருந்தால், ரேஷன் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.