மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்ட சூழலில் தமிழ்நாடு அரசு ₹6,000 நிவாரணம் அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள் டோக்கன் விநியோகத்தை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 பணம் விநியோகிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொகை யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருமான வரி செலுத்துபவர்கள், A, B பிரிவு அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நீதிபதி போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ரேஷன் கார்டுகளுக்கு நிவாரண நிதி கிடைக்காது என கூறப்படுகிறது.