fbpx

வெள்ள பாதிப்பு..!! ரூ.6,000 நிவாரணத் தொகை..!! டோக்கன் விநியோகம் தொடங்கியது..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன்கள் முதல்கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும், வீடுகளில் இருந்த முக்கிய பொருட்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட படப்பை ஊராட்சி கீழ்படப்பை பகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 ரூபாய் நிவாரண வழங்குவதற்கான டோக்கன்கள் முதல்கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது.

Chella

Next Post

ஹாரிபாட்டர் நடிகருடன் செல்ஃபி.! ஹாலிவுட் செல்கிறாரா சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர்.?

Thu Dec 14 , 2023
சின்னத்திரை மூலமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் மிருணாள் தாகூர். இவர் ஹிந்தி சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமாகி மராட்டிய சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு என வெள்ளித்திரையில் முன்னணி நடிகை அகலம் வந்து கொண்டிருக்கிறார். இவரும் துல்கர் சல்மானும் இணைந்து நடித்த சீதா ராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார் […]

You May Like