தற்போது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) UPI வாயிலாக ஒரு நபர் பணம் செலுத்துவதற்கான வரம்பை நிர்ணயித்துள்ளது. இப்போது நீங்கள் பயன்படுத்தும் பல UPI செயலிகள் வாயிலாக எவ்வளவு பணம் வரை அனுப்ப முடியும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அமேசான் பே (Amazon Pay)
அமேசான் பே தனது வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்ப அனுமதிக்கிறது. அதே நேரம் புதியதாக அமேசான் பே பயன்படுத்த துவங்கியவர்களுக்கு கணக்கை பதிவு செய்த 24 மணி நேரத்தில் ரூ. 5,000 வரை மட்டுமே பணம் அனுப்ப அனுமதிக்கப்படுகிறது.
கூகுள் பே (GPay)
கூகுள் பே செயலியில் நாளொன்றுக்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் அனுப்ப இயலாது. அத்துடன் இவற்றில் ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல் பணம் அனுப்ப முடியாது.
போன் பே (PhonePe)
இந்த செயலியானது நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரை ட்ரான்ஸாக்ஷன் செய்ய அனுமதிக்கிறது. எனினும் இந்த வரம்பு அந்த நபர் வங்கிக் கணக்கை பொறுத்தது ஆகும்.
பேடிஎம் (Paytm)
பேடி எம் செயலியில் நீங்கள் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரை ட்ரான்ஸாக்ஷன் செய்யலாம். அத்துடன் இச்செயலி ஒரு மணி நேரத்தில் ரூ.20,000 வரை ட்ரான்ஸாக்ஷன் செய்து கொள்ள அனுமதிக்கிறது. அத்துடன் இதில் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 5 தடவை மற்றும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 தடவை மட்டுமே ட்ரான்ஸாக்ஷன் செய்ய முடியும்.