இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வந்தாலும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடி செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சமீபத்தில் மும்பையை சேர்ந்த 81 பேரின் வங்கிக் கணக்கில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் காணாமல் போனது. விசாரணையில் யுபிஐ மூலம் ஒருவரின் கணக்கிற்கு தவறுதலாக அனுப்பப்பட்டதாக கூறி அனுப்பிய தொகையை திருப்பி அனுப்புமாறு கேட்கின்றனர். அதன் பிறகு அதன் மூலம் அவர்களது வங்கி மற்றும் பிற விவரங்களை திருடி சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுகின்றனர்.
அதனைப் போலவே மகாராஷ்டிரா மாநிலத்தில் மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் ரூ.1,169- க்கு டவல்கள் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.19 ஆயிரம் எடுக்கப்பட்டது. இது பற்றிய அவர் வங்கிக்கு புகார் அளித்தார். அதன் பிறகு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஒரு நபர் அந்த மூதாட்டியிடம் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய சொல்லி அதன் மூலம் மேலும் ரூ.8 லட்சத்தை அபேஸ் செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.