fbpx

குளியலறையில் உள்ள ஈரப்பதத்தை நீக்க!… இந்த ஈஸியான டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

குளியலறையில் இருந்து ஈரப்பதத்தை அகற்ற சில தாவரங்களின் உதவுகின்றன. அது என்ன தாவரங்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வீட்டின் அழகை அதிகரிப்பதுடன், வீட்டில் நடப்படும் செடிகளும் பூக்களால் வீட்டை நறுமணமாக்குகிறது. ஆனால் சில தாவரங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதோடு வீட்டின் சூழலையும் சுத்தப்படுத்துகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை. குளியலறையில் உள்ள ஈரப்பதத்தை அகற்ற உதவும் தாவரம் பற்றி பார்க்கலாம் வாங்க. குளியலறையில் இருந்து ஈரப்பதத்தை விலக்கி வைக்க, பெரிய பச்சை இலைகளுடன் அமைதியான லில்லி செடியை நடலாம். இது உங்கள் வீட்டின் குளியலறையில் உள்ள காற்றை வடிகட்டுகிறது. இந்த செடியை குளியலறையின் ஜன்னலுக்கு அருகில் வைக்கலாம். இதில், வாரத்திற்கு இரண்டு முறையாவது தண்ணீர் ஊற்றி, லேசான சூரிய ஒளி வரும் இடத்தில் வைக்க வேண்டும். நீங்கள் இந்த செடியை ஒரு கண்ணாடி குடுவையிலும் வைக்கலாம்.

ரப்பர் செடியை வீட்டிற்குள் வைத்தால், அது வீட்டின் காற்றை சுத்தப்படுத்துகிறது. அதன் அகன்ற இலைகள் மென்மையானவை. இது சுற்றியுள்ள கிருமிகளையும் சிக்க வைக்கும். இது அத்தகைய தாவரங்களில் ஒன்றாகும். இதை வீட்டில் நடவு செய்வது மிகவும் எளிது. இதனை சிறியதாக வளர்க்கலாம். ரப்பர் செடியை குளியலறையில் வைத்தால், அது குளியலறையில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சு விடுகிறது. மேலும் இது வீட்டில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் தூசி துகள்களை அகற்ற உதவுகிறது.

இந்த செடி உங்கள் வீட்டின் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்கிறது மற்றும் குளியலறையில் அதிகப்படியான ஈரப்பதத்தை தடுக்கிறது. கெர்பெரா செடியானது டிரான்ஸ்வால் டெய்சி மற்றும் பார்பர்டன் டெய்சி போன்ற பிற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. கெர்பரா டெய்ஸி விதைகள் வெப்பமான காலநிலையில் நன்றாக வளரும். இந்த செடியை குளியலறையில் நட்டால், அது உங்கள் குளியலறையின் அழகை மேம்படுத்துவதோடு, ஈரப்பதத்தையும் தடுக்கும். ஜனவரி-மார்ச் மற்றும் ஜூன்-ஜூலை இடையே ஜெர்பரா டெய்சி வளர சிறந்த நேரம். ஈரப்பதத்தைத் தடுக்க இந்த தாவரங்களை குளியலறையில் வைக்கலாம்.

Kokila

Next Post

அடிதூள்...! யூடியூப் சேனலுக்கு 500 சப்ஸ்கிரைபர் இருந்தால் போதும்...! பணம் சம்பாதிக்கலாம்...!

Thu Jun 15 , 2023
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் யூடியூப் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பயனர்கள் யூட்யூபில் சேனல் ஒன்றை ஆரம்பித்து வீடியோ பதிவுகளை பதிவுகள் மூலம் பணம் சம்பாதிக்கும் நடைமுறை உள்ளது. யூடியூப் சேனல்கள் வைத்திருப் பவர்கள் பணம் சம்பாதிக்க மானிடைசேஷன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளை யூடியூப் நிறுவனம் கடைபிடித்து வருகிறது. ஒரு சேனல் வைத்திருப்பவர் ஒரு ஆண்டில் குறைந்தது 1000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 மணி […]

You May Like