fbpx

சப்பாத்தி சாஃப்ட்டாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த ஒரு பொருளை மட்டும் மாவில் கலந்து பாருங்கள்..

மிருதுவாக சப்பாத்தி செய்வது சிறிது கடினமான விஷயம் தான். எப்படியாவது சப்பாத்தி மிருதுவாக வந்து விடாதா என்று நினைப்பவர்கள் அநேகர் உண்டு. அதிலும் லேயர் லேயராக சப்பாத்தி செய்ய வேண்டும் என்பது பல இல்லத்தரசிகளுக்கு பெரிய ஆசை. ஆனால் லேயர் லேயராக சப்பாத்தி எப்படி செய்ய வேண்டும் என்று தெரிவதில்லை. அப்படி நீங்களும் லேயர் லேயராக, மிருதுவாக சப்பாத்தி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?? அப்போ கண்டிப்பாக தொடர்ந்து படியுங்கள்..

இந்த சப்பாத்தியை சுடுவது அவ்வளவு கஷ்டம் இல்லை, மாவில் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து, பக்குவமாக மாவை பிசைந்து விட்டால் போதும். இந்த லேயர் சப்பாத்தி செய்ய முதலில் நாம் ஸ்பெஷல் ஆக சேர்க்க வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன என்பதை பார்ப்போம். ஒரு மிக்ஸி ஜாரில், வடித்த சாதம் 2 கப் அளவு சேர்த்துக் கொள்ளவும். எந்த கப்பில் சாதத்தை அளந்தீங்களோ அதே கப்பில் 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி, சாதத்தை நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இது தான் அந்த ஸ்பெஷல் ஐட்டம்

அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் சாதம் அளந்து எடுத்த அதே கப்பில் 4 கப் அளவு கோதுமை மாவு சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இந்த மாவை நன்றாக கலந்து விடுங்கள். பின்னர், மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் சாதத்தின் விழுதை இதில் ஊற்றி, ஒரு கரண்டியை வைத்து நன்றாக மீண்டும் கலந்து கொடுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்ற தேவையில்லை, இந்த சாதத்தில் இருக்கும் தண்ணீரே போதுமானது. மாவும் நாம் ஊற்றிய இந்த சாத விழுதும் ஓரளவுக்கு கலந்து வந்தவுடன் உங்கள் கையை கொண்டு இந்த மாவை சாஃப்ட்டாக பிசையவும்.

இறுதியாக கையில் எண்ணெய் தடவி மீண்டும், பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவை, ஒரு பலகை மேல் போட்டு சாஃப்டாக ஐந்து நிமிடம் பிசைந்து கொடுக்க வேண்டும். பிசைந்து சப்பாத்தி மாவை ஒரு கிண்ணத்தில் வைத்து மேலே 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தடவி தட்டு போட்டு மூடி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அந்த மாவை மீண்டும் எடுத்து ஒரு பளகையின் மேல் வைத்து ஐந்து நிமிடம் மாவை மசாஜ் செய்தபடி பிசையுங்கள். பிறகு மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வழக்கம் போல் சப்பாத்தியை தேய்த்து கொள்ளுங்கள். மாவு டிரையாகி விடக்கூடாது, அதனால் மீதம் இருக்கும் மாவின் மேல் ஒரு ஈர துணி போட்டு மூடி விடுங்கள்.

இப்போது வட்ட வடிவில் இருக்கும் சப்பாத்தியை மடிக்க வேண்டும். நீங்கள் எத்தனை லேயராக மடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, அத்தனை லேயராக மடித்துக் கொள்ளலாம். மறக்காம, சப்பாத்தியை மடிக்க கூடிய இடங்களில் எல்லாம் கொஞ்சம் எண்ணெயையும், கொஞ்சம் மாவையும் தூவி, தடவ வேண்டும். அப்போதுதான் லேயர் லேயராக சப்பாத்தி ஒட்டாமல் கிடைக்கும். முக்கோண வடிவில் தேய்த்தால் மூன்று லேயர் சப்பாத்தி கிடைக்கும். நான்கு முறை சப்பாத்தி மாவை மடித்து தேய்த்தால், நான்கு லேயராக சப்பாத்தி கிடைக்கும். இப்போது மடித்து தேய்த்த சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு மிதமான தீயில் இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்க வேண்டும். இறுதியாக தேவை என்றால் சப்பாத்திக்கு மேலே எண்ணெய் அல்லது நெய் தடவி கொள்ளலாம். இப்போது நீங்கள் ஆசைப்பட்ட சாஃப்ட்டான லேயர் சப்பாத்தி ரெடி…

Maha

Next Post

தமிழகமே ரெடியா...? வரும் 25, 26 ஆகிய தேதிகளில் இளநிலை உதவியாளர் பணிக்கு கலந்தாய்வு...! முழு விவரம்

Sat Sep 23 , 2023
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் பள்ளிக்கல்வித்துறைக்கு 673 ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிநாடுநர்களுக்குக் கலந்தாய்வு நடைபெற உள்ளதால் 25,26 நாளில் கலந்தாய்வில் கலந்து கொள்ள […]

You May Like