அவசரமான காலை நேரத்தில், பலருக்கு இருக்கும் பெரிய வேலை துணிகளை அயன் செய்வது. குழந்தைகளின் சீருடையில் இருந்து, கணவரின் உடை என்று அனைவரின் துணிகளையும் அயன் செய்ய அதிக நேரம் செலவழிந்து விடும். துணிகளை அயன் செய்ய நீங்கள் செலவழிக்கும் நேரத்தை நீங்கள் மிச்சம் செய்ய வேண்டுமா?? அப்போ, இந்த குறிப்பு உங்களுக்கானது. சுலபமாக செய்யப்படும் இந்த லிக்விட் உங்கள் நேரத்தை மிச்சம் செய்து விடும்.
இந்த லிக்விட் செய்ய நமக்கு தேவையான பொருள் கான்பிளவர் மாவு மட்டுமே. இதற்க்கு முதலில், ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் இரண்டு ஸ்பூன் கான்பிளவர் மாவு போடுங்கள். அதில், இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்து விடுங்கள். இதை அப்படியே அடுப்பில் வைத்து 2 அல்லது 3 நிமிடம் சூடு செய்தால் போதும், திக்கான ஒரு லிக்விட் கிடைக்கும். இந்த லிக்விட்டை நன்கு ஆறவைத்து விடுங்கள்.
பின்னர் ஆறிய லிக்விட்டை பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது, துணி சுருக்கம் இல்லாமல் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீரை எடுத்து, இரண்டு ஸ்பூன் அளவு நாம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் கான்பிளவர் லிக்விட்டை ஊற்றி கலக்கவும். இப்போது உங்கள் துணியை இந்த கான்பிளவர் கலவை கலந்த தண்ணீரில் நன்றாக முக்கி எடுத்து, உதறி வெயிலில் காய வைத்தால் போதும். நீங்கள் காய வைக்கும் போது துணியில் சுருக்கம் இல்லாமல் காய வைக்க வேண்டும். இப்போது உங்களுக்கு, சுருக்கம் இல்லாத கஞ்சி போட்டது போன்ற ஆடைகள் சுலபமாக கிடைத்துவிடும்.