லைசால் பெரும்பாலும் அநேகர் வீடுகளில் இருக்கும். ஆனால் நாம் அதை வீட்டின் தரையை துடைப்பதற்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். கிருமி நாசினியான லைசால். தரையில் உள்ள கிருமிகளை அழித்து விடும், உண்மை தான். ஆனால் இந்த ஒரு லைசாலை வைத்து நாம் பல வேலைகளை சுலபமாக முடித்து விடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?? ஆம், அதற்க்கு நாம் லைசாலை வைத்து ஒரு லிக்விட் தயார் செய்ய வேண்டும். அதற்க்கு, ஒரு டப்பாவில், லைசால் 1 மூடி, கம்ஃபோர்ட் 1 மூடி, தண்ணீர் 1 சின்ன டம்ளர் ஊற்றி நன்கு கலந்து விடுங்கள்.. நமக்கு தேவையான லிக்விட் தயார்..
இப்போது, ஒரு திக்கான காட்டன் துணியை இந்த லிக்விட்டில் நனைத்து கொள்ளுங்கள். அந்த துணியை ஒட்டடை குச்சிக்கு மேல் ரப்பர் பேண்ட் போட்டுவிடுங்கள். இப்போது இந்த ஒட்டடை குச்சியால் உங்கள் வீடு முழுவதும் ஒட்டடை அடிக்கும் போது, இந்த துணியில் இருக்கும் லைசால் ஈரம் சுவற்றின் மூளை முடுக்குகளில் படும். அப்படி படும் போது, மீண்டும் ஒட்டடை சீக்கிரத்தில் சேராது. அது மட்டும் இல்லாமல், கண்ணுக்குத் தெரியாத சின்ன சின்ன சிலந்திகளும் உங்களுடைய வீட்டில் கூடு கட்டாது.
இப்போது, 1/2 லிட்டர் தண்ணீரில் 2 மூடி லைசால், 2 மூடி கம்போர்ட் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை ஒரு பழைய வாட்டர் கேனில் ஊற்றி மூடி போட்டு விடுங்கள். பின்னர், அந்த கேனில் சின்ன சின்ன ஓட்டைகளை போட்டு பாத்ரூமில் வைத்து விடுங்கள்.. இப்போது இந்த லிக்விட்டை, நீங்கள் பாத்ரூம் பயன்படுத்திய பிறகு கொஞ்சம் ஊற்றி விட்டால் துர்நாற்றம் வீசாமல், நல்ல மனம் வரும். மேலும், இது ஒரு நல்ல கிருமி நாசினியாக செயல்படும்.
இப்போது இந்த லிக்விட்டை, ஒரு டிஸ்யூ பேப்பரில் கொஞ்சமாக ஸ்ப்ரே செய்து, அதை குப்பை கூடைக்கு அடிப்பக்கத்தில் வைத்து விடுங்கள். இதனால் குப்பை கூடையில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருப்பதோடு, சின்ன சின்ன கொசுக்கள் ஈக்கள் மற்றும் எறும்புகள் வராது.
நன்கு காய்ந்த காட்டன் துணியில், வெறும் லைசாலை தொட்டு அழுக்கு படிந்த வெள்ளை ஷூவை துடைத்து பாருங்கள். எவ்வளவு அழுக்கான வெள்ளை ஷூவும் பளிச்சென்று ஆகிவிடும். அதே போல், பெயிண்ட் அடித்த சுவற்றில் உங்களின் குழந்தைகள் ஸ்கெட்ச், பென்சில், பேனாவை வைத்து கிறுக்கிய இடத்தையும் இதை வைத்து சுலபமாக சுத்தம் செய்து விடலாம்..