நல்ல நாள் வருகிறது என்றால் அதில் இருக்கும் சந்தோஷத்தை விட, பூஜை பாத்திரங்களை துலக்கி எடுக்கும் வேலையை நினைத்தால் தலை சுற்றி விடும். ஆம், எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதால் உடனே அதில் எண்ணெய் பிசுக்கு படிந்து. விளக்குகள் கருப்படைந்து விடும். எவ்வளவு துலக்கினாலும் பித்தாளை பாத்திரங்களை பளிச்சென்று மாற்றுவது கடினம். அப்படி உங்களுடன் பல வருடங்களாக எண்ணெய் பிசுக்கு படிந்த பூஜை பாத்திரங்கள் இருக்கா?? இனி கவலை வேண்டாம்.. சுலபமாக பளிச்சென்று மாற்றிவிடலாம்.
முதலில் பூஜை பாத்திரங்கள் மீது இருக்கும் அழுக்கு எண்ணெய் பிசுக்குகளை ஒரு டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்து விடுங்கள். பின்னர், புளித்த தயிரை எடுத்து பூஜை பாத்திரங்களின் மீது தேய்த்து ஐந்து நிமிடம் ஊற விடுங்கள். இப்போது, ஒரு சிறிய பவுலில் 2 ஸ்பூன் கோதுமை மாவு, 2 ஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் லிக்விட், 1 ரூபாய் ஷாம்பு பாக்கெட்டில் உள்ள ஷாம்பு இவைகளை நன்கு குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை, நாம் தயிர் தேய்த்து வைத்திருக்கும் பூஜை பொருட்களின் மீது தேய்த்து மீண்டும் ஐந்து நிமிடம் ஊற வைத்துவிடுங்கள். பின்னர், ஒரு ஸ்க்ரப்பர் வைத்து லேசாக தேய்த்து பாருங்கள். உங்கள் பூஜை பாத்திரங்கள் புதிது போல மின்ன ஆரம்பித்து விடும். இப்போது பாத்திரங்களை கழுவி விட்டு, காட்டன் துணி வைத்து துடைத்து விடுங்கள்.