fbpx

’தமிழ்நாட்டை பின்பற்றி சிக்கிம் மாநிலத்திலும் அம்மா உணவகம்’..!! பாஜக தேர்தல் அறிக்கை..!!

சிக்கிம் தேர்தலில் வெற்றி பெற்றால், அம்மா உணவகம் தொடங்கப்படும் என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் 32 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் ஏப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தியா முழுவதும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ஆம் தேதியே நடக்கவுள்ளது. இரண்டு மாநிலங்களின் பதவிக் காலமும் ஜூன் 2ஆம் தேதி நிறைவடைவதால் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, சிக்கிம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதியை வெளியிட்டுள்ள பாஜக, பெண்களால் நடத்தப்படக் கூடிய வகையில் அம்மா உணவகம் என்ற பெயரில் அரசு உணவகம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், பெண்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பின்பற்றி, சிக்கிலும் அம்மா உணவகங்கள் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

Read More : ”ராணுவ வீரர்களுக்கு பதில் வேறொருவர் வாக்களிக்கலாம்”..!! வெளியான அறிவிப்பு..!!

Chella

Next Post

இளம் வயதிலேயே தரமான சம்பவம்..!! விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் சுப்மன் கில்..!!

Thu Apr 11 , 2024
இந்தியன் பிரீமியர் லீக்கில் 3,000 ரன்களை குவித்து கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டி வரலாற்றில் 3,000 ரன்களை குவித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார் சுப்மன் கில். நேற்று (10.04.2024) ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். சுப்மன் கில்லுக்கு முன்பு மிகக் குறைந்த […]

You May Like