கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்து சம்பவத்தை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளன.
கோவையில் நேற்று நடந்த கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிவிபத்தில் உயிரிழந்த நபர் ஜமேசா முபின் என்ற 25 வயதான இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. கார் வெடி விபத்தில் இறந்த ஜமேசா முபின் அவர் வந்த காரில் ஆணிகள், கோலிகுண்டு போன்றவை இருந்தது தடயவியல் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜமேசா முபின் வீட்டைச் சோதனையிட்டதில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்கத் தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இறந்தவர் மீது வேறு வழக்குகள் எதுவும் இல்லை. இறந்தவருடன் தொடர்பிலிருந்த நபர்களை தமிழக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
அவர் பயன்படுத்திய அந்த கார் கார் 9 பேரிடம் கைமாறியுள்ளது. தொடர்ந்து இது குறித்து வேகமாக விசாரணை நடத்தி காரை யார் வாங்கினார் என்பது குறித்தும் சிலிண்டர் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜமோசா முபினிடம் NIA ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர், ஆனால் அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் கிடையாது. போலீஸ் செக்போஸ்ட் அங்கு இருந்ததால் அவர் இறங்கி ஓடி இருக்கலாம். இன்னும் புலன் விசாரணை நடைபெறுகின்றது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன குறிப்பாக விமான நிலையங்களில் சோதனையானது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.