உத்தபிரதேசத்தில் விளையாட்டு வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவி வருகின்றது.
உத்தரபிரதேசம் மாநிலம் சஹாரான பூரில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் 17 வயதிற்குள்பட்ட சிறுமிகள் 200 பேர் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது குறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
விளையாட்டு அரங்கத்தில் உள்ள கழிவறையில் பெரிய தட்டில் உணவு வைக்கப்பட்டுள்ளது. அதை மாணவர்கள் அந்த அறையிலேயே பயன்படுத்தி தங்கள் கைகளால் உணவை அள்ளி தட்டில் எடுத்துச் செல்லுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விளையாட்டு வீரர்களை இப்படியா நடத்துவது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக விளையாட்டுத்துறை அதிகாரி அனிமேஷ் சக்சேனா என்பவரிடம் விசாரணை நடத்தியபோது ’’ உணவு தரமாக சமைத்து கொடுக்கப்பட்டது , தால் சப்ஜி ஆகியவை நீச்சல் குளம் அருகே உள்ள ஒரு சுத்தமான இடத்தில்தான் சமைத்து வழங்கப்பட்டது . இடம் பற்றாக்குறையால்தான் சமையல் அறையில் சமைக்க முடியவில்லை ’’ என்றார். ’’ உணவு சமைத்ததை பற்றி பேசவில்லை , உணவு எங்கே பரிமாறப்பட்டது, கழிவறை முன்புறத்திலா சாப்பாடு வழங்குவது. ’’ என்று விசாரணை அதிகாரி கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக விளையாட்டு வீரர்களிடம் செய்தி ஏஜென்சி விசாரணை நடத்தியபோது , டாய்லட் இருந்த அறையில் பெரிய தட்டில் சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. அதுவும் அந்த தட்டு கழிவறையின் தரையில் ஒரு சிறிய துண்டு பேப்பர் விரிக்கப்பட்டு அதன்மீது தட்டு வைக்கப்பட்டிருந்து. மதிய உணவிற்கு நாங்களே எடுத்து பரிமாறிக் கொண்டோம்.’’ என்று தெரிவித்தனர்.
டாய்லட் உள்ளே உணவு உள்ளது , அதை மாணவர்கள் அங்கிருந்து தட்டில் எடுத்து வந்து சாப்பிடுகின்றனர். அதற்கு அருகிலேயே அதே அறையில் ஆண்கள் சிறுநீர் கழிக்கும் பேஷன்கள் உள்ளது. என்ன இதெல்லாம் என விசாரணை அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை கண்டித்ததோடு அவரை விளையாட்டுத் துறை அமைச்சர் சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பாக தொடர்நது விசாரணை நடத்த வேண்டும் என்றும் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அனுரக் தாகூர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், ஒய்.எஸ் . ஆர் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.