உக்ரைன் அணை உடைப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா வேதனை தெரிவித்துள்ளது.
உக்கரைனில் உள்ள டெனிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட அணை கடந்த ஆறாம் தேதி உடைந்தது. இதனால் தென் உக்கரைன் பகுதியை அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் முழ்கடித்தது. இந்த நிலையில் உக்ரைன் அணை உடைந்ததால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஐ.நா வேதனை தெரிவித்துள்ளது. கோதுமை, பார்லி, சோளம், ட்ராக்சி, சூரியகாந்தி விதை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் மற்றும் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அணை உடைப்பின் காரணமாக அறுவடை செய்வதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் எனவும் வேதனை தெரிவித்துள்ளது.