கத்தாரில் கால்பந்தாட்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதற்கான பணிகளில் ஈடுபட்ட சுமார் 6000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகின்றது. இதற்கான உரிமத்தைஅந்நாடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றது. எனவே முன்னேற்பாடு பணிகளை சுமார் 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றது. இப்பணிகளில் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் பணியாளர்கள் 6000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் இந்தியா, நேபாளம், வங்கதேசம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகுிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. கால்பந்தாட்ட தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவலை ’தி கார்டியன்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. எனவே கால்பந்தாட்ட தொடர் நடத்தப்பட்டு வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
2010ல் கால்பந்தாட்டமைதானம், ரசிகர்கள் அமருவதற்கான இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் விளையாட்டரங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக நடைபெற்றுவந்துள்ளது. சுமார் ஒரு நகரத்தை உருவாக்கியுள்ளனர். இதனிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக நடத்தப்பட்டதாகவும். உலக கோப்பை பணிகள் தொடங்கப்பட்ட பின்னர் இந்த 10 ஆண்டு காலத்தில் 6000 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரில் நிலவும் கடுமையான வெப்பத்தில் தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்வது உள்ளிட்ட கடுமையான வேலைப்பளு காரணமாக அமைந்ததாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த தொழிலாளர்களின் இறப்புக்கான காரணமாக ’இயற்கை மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டுள்ளதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. கத்தாரை போட்டி நடத்தும் நடாக தேர்வு செய்தது தவறு என்று முன்னாள் ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர் தெரிவித்துள்ளார். கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் நிலை குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்நாட்டினர் அடிமாட்டை வேலை வாங்குவது போல் பணியில் ஈடுபட்டதுதான் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பை மைதானத்தை கட்டிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் புகைப்படங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மொசைக் ஆரட் பேனர் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சகை கிளம்பியவுடன் இந்த பேனர் வைப்பதற்கு என்ன அவசியம் எனவும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.