fbpx

24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் கால்பந்துவீரர் ” பீலே” மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தால் பரபரப்பு..!

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இருப்பினும், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாகவே பீலே உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். புற்றுநோய் மிகவும் முன்னேறி உடலின் சில பாகங்களுக்கு பரவியுள்ளது. மேலும், நுரையீரல், இயத செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பீலே அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை பீலே உடன் கொண்டாட குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் குவிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Kathir

Next Post

யாரும் வெளியே போகாதீங்க...! 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...!

Mon Dec 26 , 2022
பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிலவரப்படி நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு மற்றும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை […]

You May Like