fbpx

குட் நியூஸ்..!! பட்டா + வரைபடம்..!! இனி இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்கும்..!! இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்க..!! தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!

இனி உங்கள் பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பெறுவதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் நில ஆவணங்களை எளிதாக பெறும் வகையிலும், மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கும் https:eservices.tn.gov.in/eservicesnew/ index.html என்ற இணையதளம் மூலம் பல்வேறு சேவைகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இதிலிருந்து பொதுமக்கள் தங்களது வீடு, நிலம் மற்றும் சொத்துகளுக்கான பட்டா, வரைபடங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

செல்போன் எண் கொடுத்து அதில் வரும் ஓடிபி மூலம் ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய முடியும். அதுவும் ஒரு செல்போனுக்கு, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 8 முறை மட்டுமே ஆவணங்களை பெற முடியும். இந்நிலையில் தான், இனி பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பெறுவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்களின் வசதிக்காக புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. தற்போதுள்ள நடைமுறையின்படி, பட்டாவையும், நிலத்திற்கான வரைபடத்தையும் தனித்தனியாக தான் பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால், இனி மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றுடன் சர்வே விவரங்களை கொடுத்தால், பட்டாவுடன் வரைபடமும் வந்துவிடும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதனை பிரிண்ட்-அவுட் எடுப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. அதனை மேம்படுத்திவிட்டு, விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்” என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Read More : ”குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் ஹாரன் அடிக்கவும், பட்டாசு வெடிக்கவும் தடை”..!! தமிழ்நாடு அரசு பரபரப்பு உத்தரவு..!!

English Summary

It is said that the Tamil Nadu government is now planning to implement a plan to get your map along with your patta.

Chella

Next Post

வாஷிங்டன் விமான விபத்தில் 18 பேர் பலி.. கட்டணமில்லா உதவி எண்ணை வெளியிட்டது அமெரிக்க ஏர்லைன்ஸ்..!!

Thu Jan 30 , 2025
Washington plane crash horror leaves 18 dead: American Airlines issues toll-free helpline number

You May Like