பீகார் மாநிலத்தில், ஏற்கனவே செலுத்தப்பட்டிருந்த கடனை இன்னும் செலுத்தவில்லை என்று தெரிவித்து கடன் வாங்கிய ஒரு பெண்மணியை நிர்வாணப்படுத்தி, கொடுமை செய்த நபர் குறித்து, அந்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. கடன் வாங்கிய பெண் தாழ்த்தப்பட்டவர் சமுதாயத்தை சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்து அந்தப் பெண்ணுக்கு கடன் கொடுத்த பிரமோத் சிங் என்பவரும், அவருடைய மகன்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அதோடு பாதிக்கப்பட்ட பெண் பிரமோத் சிங் மற்றும் அவருடைய மகன் உள்ளிட்டோர் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை அடையாளமும் காட்டியுள்ளதாக தெரிகிறது. அந்த பெண்ணின் குடும்பத்தினர் இது பற்றி, தெரிவித்ததாவது, நாங்கள் வாங்கிய கடனுக்கான வட்டியையும், அசல் தொகையையும் ஏற்கனவே நாங்கள் கொடுத்துவிட்டோம், இருந்தாலும், வட்டியை மீண்டும், மீண்டும் கேட்டு எங்களை தொந்தரவு செய்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
குறித்து காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை அதோடு இதில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்களை கைது செய்வதற்காக அவர்கள் தங்கி இருந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த சனிக்கிழமை இரவு பாதிக்கப்பட்ட பெண்ணை தேடி சென்ற அவருடைய மகன்கள் அந்த பாதிக்கப்பட்ட பெண்மணியை அடித்ததோடு, மட்டுமல்லாமல் பல அருவருத்தக்க செயல்களையும் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள உயர் சாதி வகுப்பை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடலாம் என்று முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதே நேரம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதன் காரணமாக, அந்த பெண்ணுக்கு பல்வேறு பகுதிகளில் உடலில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
அந்த பாதிக்கப்பட்ட பெண் மீது தாக்குதல் நடத்திய நபர்கள், அந்த கிராமத்தில் உள்ள ஆதிக்க வகுப்பைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.