fbpx

Woww…! இனி நோ கவலை…! TNPSC, UPSC போண்ற தேர்வுக்கு படிக்க புதிய செயலி…! அட்டகாசமான அறிவிப்பு.‌..!

நோக்கம்’ என்ற செயலியின் மூலம் TNPSC,TNUSRB, SSC,IBPS, UPSC போன்ற அனைத்து நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின்‌ முதன்மைப்‌ பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப்‌பணியாளர்‌ கல்லூரி அரசுத்‌ துறைகளிலும்‌, பொதுத்‌ துறை நிறுவணங்களிலும்‌ பணிபுரிபவர்களுக்குப்‌ பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின்‌ தன்மையை விரிவுபடுத்தவும்‌, தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் அது சென்றடைய வேண்டும்‌ என்ற எண்ணத்தில் AIM TN என்றழைக்கப்படும்‌ காணொலிப்பாதை ஒன்றை ஆரம்பித்து அதில்‌ பயிற்சிக்‌ காணொலிகளைப்‌ பதிவேற்றம்‌ செய்து வருகிறது.

இந்த காணொளிப்பாதையின்‌ நீட்சியாக இக்கல்லூரி போட்டித்‌ தேர்வுகளுக்கென்றே செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. “நோக்கம்‌” என்று பெயரிடப்பட்டுள்ள இச்செயலியின்‌ மூலம்‌ தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌, தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌, மத்திய அரசு சுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, வங்கிப்‌ பணியாளர்‌ தேர்வு நிறுவனம்‌, UPSC போண்ற அனைத்து நிறுவனங்கள்‌ நடத்தும்‌ தேர்வுகளுக்கும்‌ பயிற்சி அளிக்கத்‌ திட்டமிடப்பட்டுள்ளது.

அன்றாடம்‌ பதிவேற்றப்படும்‌ பயிற்சி காணொளிகளை காண்பதோடு அதற்கான பாடக்‌ குறிப்புகளையும்‌ இச்செயலி,மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. இதன் சிறப்பம்சமே மாதிரித்‌ தேர்வுகள் தான். ஒவ்வொரு பாடத்திலும்‌ பலவிதமான தேர்வுகள்‌ நடத்தப்பட்டு விடைத்தாள்கள்‌’ திருத்தி கொடுக்கப்படும்‌. இது மாணவர்கள்‌ தங்கள்‌ தயாரிப்பின்‌ நிலையை அவ்வப்போது, சுயமதிப்பீடு செய்து கொள்ள உதவும்‌.

Vignesh

Next Post

#Rain: இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை மழை...! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...!

Mon Feb 27 , 2023
டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, […]

You May Like