ஆப்பிரிக்கா என்னும் பெரிய கண்டத்தில், தெற்கு சூடான் (South Sudan) என்ற நாடு உள்ளது. அந்த நாட்டில் முண்டாரி (Mundari) என்னும் பழங்குடியினர் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை நம் வாழ்க்கையைவிட மிக வித்தியாசமானதும், விசித்திரமானதும் ஆக உள்ளது.
முண்டாரி மக்கள், பசுக்களின் சிறுநீரை குளிக்க பயன்படுத்துகிறார்கள். இது நமக்கே கேட்க ஆச்சரியமாக இருக்கலாம்! ஆனால், அந்த மக்களுக்கு இது ஒரு வழக்கமான விஷயம். அவர்கள் சொல்லும்போது, பசுக்களின் சிறுநீரில் உள்ள அம்மோனியா (ammonia) என்ற பொருள், தோலுக்கு பாதுகாப்பாகவும், தலைமுடியை மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாற்றவும் உதவுகிறது.
அது மட்டுமல்ல அவர்கள் பல்லும் பசுக்களின் சிறுநீரால் துலக்குகிறார்கள். இது நம் பார்வைக்கு விசித்திரமானதாக தோன்றினாலும், அவர்கள் பார்வையில் இது ஒரு தூய்மை நடைமுறை. முண்டாரி மக்கள், வீடுகளில் தீமைகளைக் குறைக்க பசு சிறுநீரை தெளிக்கிறார்கள். இதனால் கிருமிகள் மாறி போகும் என்றும், பசுக்கள் ஒரு புனிதமான உயிர் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
முண்டாரி மக்கள் வளர்க்கும் மாடுகள் சாதாரண மாடுகள் அல்ல. இவை “அன்கோல் வதுசி” (Ankole-Watusi) என்ற இனத்தைச் சேர்ந்தவை. இந்த மாடுகள் 8 அடி உயரம் வரை வளரக்கூடியவை, ஒரு மாடுக்கு ரூ.41,000 மதிப்பு (இந்திய மதிப்பில்). திருமணங்களில் இந்த மாடு வரதட்சணையாக கொடுக்கப்படும். இறைச்சிக்காக மாடுகள் கொள்ளப்படுவது மிக அரிது. அவர்கள் இந்த மாடுகளை மிக பெரிய செல்வமாக மட்டுமல்ல, கௌரவச் சின்னமாகவும் கருதுகிறார்கள். அதனால்தான், பசுக்களை காப்பாற்ற இயந்திர துப்பாக்கிகளுடன் காவலர் போல இருந்து விடுகிறார்கள்.
முண்டாரி மக்கள், பசுக்களின் சாணத்தை உடலில் பூசிக்கொள்கிறார்கள். ஏனேன்றால் இது அவர்களுக்கு ஒரு வகையான சன் ஸ்கிரீன் (sun screen) போல வேலை செய்கிறது. வெயிலின் தீவிரம் அதிகமாக இருக்கும் அந்த நாட்டில், பசு சாணம் தோலை காய்ச்சாதபடி பாதுகாக்கிறது. இந்த பழங்குடியினர் இன்று வரை அறிவியல் தொழில்நுட்பம் இல்லாமல், இயற்கையை நம்பி வாழ்கின்றனர். நம் பார்வைக்கு இது விசித்திரமாக தோன்றலாம், ஆனால் அவர்களுக்கே இது வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறது.
Read more: அட.. இரவில் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா..? இது தெரியாம போச்சே..!!