fbpx

தொலைதூரக்கல்வி பயில… ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம்..!

தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு ஜூலை பருவத்துக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு ஜூலை பருவத்துக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் தொடங்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல், வணிகம், இதழியல் மற்றும் மக்கள்தொடர்பு, சட்டம், கல்வி, மேலாண்மை, சமூக அறிவியல், தொழில்சார் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம்.

எஸ்சி, எஸ்டி பிரிவைசேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு குறிப்பிட்ட இளங்கலை படிப்புகளில் கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். இக்னோ பல்வேறு ஆன்லைன் படிப்புகளையும் வழங்கி வருகிறது. இதில் சேர https://ignouiop.samarth.edu.in , http://https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

எல்லை மீறும் பேச்சுக்கள்!! கோபமடைந்த தேர்தல் ஆணையம்!! பாஜக, காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்களுக்கு கடிவாளம்!!

Thu May 23 , 2024
பாஜக,காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் தேர்தல் பிரசாரங்களில் எல்லை மீறி பேசுவது தேர்தல் ஆணையத்தை கோபமடைய செய்துள்ளது. மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. எஞ்சிய இரு கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், கடந்த 3 கட்ட தேர்தல் நிறைவடைந்த பின்னர் இரண்டு தேசிய கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களின் எல்லை மீறும் தேர்தல் பிரசாரம் தேர்தல் ஆணையத்தை கோபமடைய செய்துள்ளதாக […]

You May Like