fbpx

“கூந்தல் ஆரோக்கியத்திற்கு…” எளிய முறையில் பயோடின் ஸ்மூத்தி செய்வது எப்படி.? எளிமையான ரெசிபி இதோ.!

கூந்தல் ஆரோக்கியம் மற்றும் சருமம் பளபளப்பாக இருக்க நட்ஸ் வச்சு பிரிப்பேர் பண்ற இந்த சூப்பரான மில்க் ஷேக் ட்ரை பண்ணி பாருங்க. இந்த ரெசிபியும் ரொம்ப சிம்பிள்.முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் 4 அத்திப்பழம், ஒரு டேபிள் ஸ்பூன் கிஸ்மிஸ், ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி, ஒரு டேபிள் ஸ்பூன் வால்நட், ஒரு டேபிள் ஸ்பூன் எள்ளு ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகள் மற்றும் ஐந்து பேரீத்தம் பழம் ஆகியவற்றை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

காலையில் இதை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு இவற்றுடன் கால் லிட்டர் பால் மற்றும் ஒரு வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இந்தக் கலவை நன்றாக அறைந்ததும் அதை ஜாரில் இருந்து கிளாஸ் இருக்கு மாற்றினால் அருமையான பயோட்டின் மில்க் ஷேக் ரெடி.

இதில் இரும்புச் சத்து பொட்டாசியம் கால்சியம் புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இந்த மில்க் ஷேக் கூந்தல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு ரத்த உற்பத்தி எலும்புகள் வலுப்பெறுதல் போன்ற பலவற்றிற்கும் உதவுகிறது.

Next Post

"முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை…" வாசலில் சாணம் தெளித்து கோலம் போடுவதன் அறிவியல் பின்னணி.!

Fri Nov 24 , 2023
முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்ற வாசகம் தற்போதைய இன்டர்நெட் காலத்தில் மீம்ஸ் ஆக்கப்பட்டு நகைப்பிற்குரிய சொல்லாடலாக ஆக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் உண்மையிலேயே அந்த வார்த்தைக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு விஷயங்களுக்குப் பின்பும் சாஸ்திர மற்றும் அறிவியல் ரீதியான உண்மை இருக்கிறது. அவற்றை ஆராய்ந்து பார்த்தால் அதில் இருக்கும் உண்மைகள் நமக்கு புரியும். பண்டைய காலம் தொட்டு இன்று வரை கிராமப்புறங்களில் இருக்கும் பெரும்பாலான […]

You May Like