fbpx

தீவிரவாதி தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு; ரூ.25 லட்சம் பரிசு என்.ஐ.ஏ அறிவிப்பு..!

1993-ஆம் வருடம் மும்பையில் நடந்த தொடா் குண்டுவெடிப்பில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமை, தேடப்படும் தீவிரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது. அவா் பல வருடங்களாக பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறாா். பாகிஸ்தான் அரசு தாவூத்துக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறது.

இது பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவில் ஒரு தீவிரவாத குழுவை அமைத்து, நாட்டுக்குள் வெடிபொருள்கள், பயங்கர ஆயுதங்கள், கள்ள நோட்டுகள் மற்றும் போதைப் பொருள்களைக் கடத்தல் போன்ற நாட்டுக்கு எதிராக தாவூத் இப்ராகிம் செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தானில் இருந்து கொண்டு, அந்த நாட்டின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் உதவியோடு, இந்தியாவில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்.

இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே தாவூத் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது. தாவூத் மட்டுமின்றி அவனது கூட்டாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கும் சன்மானம் வழங்கப்படும் என்றும் என்ஐஏ அறிவித்துள்ளது. ஒவ்வொரு கூட்டாளிக்கும் வெவ்வேறு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தாவூத்துடன் தொடர்பிலிருக்கும் டைகர் மேமன், அனீஸ் இப்ராஹிம், ஜாவேத் சிக்னா ஆகியர் பற்றி துப்பு கொடுத்தால் 15 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Baskar

Next Post

”எனது வீட்டை இடித்துத் தள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன்”..! மேற்குவங்க முதல்வர் மம்தா..!

Thu Sep 1 , 2022
தாம் வசிக்கும் வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்தால் அதை இடிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பாஜகவினர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். அதேபோல் மேற்கு வங்க மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் நிர்வாகிகள் மீது பாஜகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் திரிணாமூல் கட்சியின் […]

You May Like