உத்தரகண்ட் மாநிலத்தில் அங்கிதா என்ற பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாலியல் தொழிலுக்கு ரூ.10,000 கூடுதலாக தருவதாகவும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் பதவிநீக்கம் செய்யப்படும் எனவும் மிரட்டியதாக வாட்சப் தகவல்களில் தெரியவந்துள்ளது.
உத்தரகண்டில் பவுரி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட அங்கிதா பந்தாரியின் உடல் மீட்கப்பட்டது. அத்துடன் அவரது செல்போனையும் போலீசார் மீட்டனர். அந்த செல்போன் தற்போது முக்கிய ஆதாரமாக உள்ளது. அந்த செல்போனில் சோதனை செய்தபோது தனது தோழியிடம் பகிர்ந்து கொண்ட விஷங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
பணியிடத்தில் மேலாளர் மற்றும் உரிமையாளர் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடவேண்டும் என தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதை தன் தோழியிடம் அங்கிதா கூறியுள்ளார். ’’ சிறப்பு சேவை செய்தால் ரூ.10,000 கூடுதலாக தருவதாக என்னிடம் தெரிவித்துள்ளார்கள். இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் வேறொரு புதிய பெண் ரிசப்ஷனிஸ்டாக பணியமர்த்தப்படுவார். உன் வேலை பறிக்கப்படும். என கூறியுள்ளார்கள். நான் வேறு வேலையை பார்க்கலாம் என நினைக்கின்றேன். ’’ என அந்த பதிவில் இருந்துள்ளது.
இதன்படி கடந்த சில நாட்களாகவே அங்கிதா பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என உரிமையாளர் கட்டாயப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. எனினும் முழுமையாக இந்த போன் ஆய்வுக்குட்படுத்தப்படும் சோதனைக்கு பின்னர் இது உண்மையாக இருந்தால் கண்டிப்பாக கடுமையான தண்டனை கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரிக்க டிஜிபி ரேணுகா தேவி தலையைில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இனி வழக்கை அவர் விசாரிப்பார் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.