fbpx

6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடவேளைகளில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 6ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு, தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை - சமூக இடைவெளியை  பின்பற்ற கல்வித்துறை உத்தரவு||First enrollment in government and private  schools tomorrow Academic ...

அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாடவேளை ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

VIVO மொபைல் நிறுவனத்திற்கு சொந்தமான 44 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு..!

Tue Jul 5 , 2022
விவோ (VIVO) மற்றும் அதன் தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  சீன மொபைல் ஃபோன் நிறுவனமான விவோ (VIVO) மற்றும் அதன் தொடர்புள்ள 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய அரசு நிறுவனங்களான அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை தொடர்ந்து கண்காணித்து […]
VIVO மொபைல் நிறுவனத்திற்கு சொந்தமான 44 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு..!

You May Like