fbpx

சொந்த ஊருக்கு போறீங்களா..? 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எப்போது முதல் தெரியுமா..?

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பண்டிகைகள், தொடர் விடுமுறைகளின் போது சென்னையில் உள்ள வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.. அந்த வகையில் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை வருகிறது.. இதை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 3 நாட்கள் விடுமுறை வருகிறது.. மேலும் ஏப்ரல் 22-ம் தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது.. தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி நாளை சென்னை கோயம்பேட்டில் இருந்து கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. மேலும், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஏப்ரல் 21-ம் தேதி 200 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம், விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வழக்கமாக தினமும் 2100 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 500 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தனர்..

Maha

Next Post

ஜூன் மாதம் நடிகை த்ரிஷாவுக்கு டும் டும் டும்..!! மாப்பிள்ளை யார் தெரியுமா..? பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!!

Wed Apr 12 , 2023
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து லியோ திரைப்படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில், யூடியூபர் ஏ.எல். சூர்யா தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது அவருக்கும் நடிகை த்ரிஷாவுக்கும் ஜூன் மாதம் திருமணம் […]

You May Like