கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் தண்ணீருக்கென தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலத்தில் தண்ணீருக்காக தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் கொண்டு வரப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் நீர் இருப்பு குறைந்து வருவதால் வளத்தை முறையாக பயன்படுத்தவும் நீர் வீணாவதை தடுக்கவும் தண்ணீர் பட்ஜெட் உதவிகரமாக இருக்கும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் 44 ஆறுகள், உப்பளக்கழிகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் மற்றும் நல்ல மழை வளம் இருந்தாலும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், நீர் வீணாவதை தடுக்கவும் தண்ணீர் பட்ஜெட் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.