fbpx

முதன்முறையாக தமிழ்நாடு – கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் சேவை!… வெளியானது அறிவிப்பு!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு – கர்நாடகா இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பெங்களூரு இடையே தினமும் லட்சக்கணக்கான மக்கள் பணிக்கு சென்று வருகின்றனர். இதனால், ஓசூர் – பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் சாலையில் வாகனங்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்வதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரு – ஓசூர் இடையே மெட்ரோ ரயில் வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் சேவை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதற்கான அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. ஓசூர் கர்நாடகா மாநிலம் பொம்மச்சந்திரா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து 20.5 கி.மீ. தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

குட் நியூஸ்...! மத்திய அரசின் வீடு வழங்கும் திட்டம்... 2024 டிசம்பர் வரை நீட்டிப்பு...!

Wed Aug 2 , 2023
அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டமானது, 2015 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது‌. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நகர்ப்புறங்களில் வசிக்கும் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் அனைத்து பருவ நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிதி உதவியோடு, பயனாளிகளை தேர்ந்தெடுத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட 118.90 லட்சம் வீடுகளில், […]

You May Like