ஒரு மாநிலத்தில், பிற சமூகத்தினர் வசிக்கிறார்கள் என்பதற்காக கோவிலில் நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கான அனுமதியை நிராகரிக்க முடியாது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல சமூகங்கள் வசிக்கின்றன என்பதை காரணம் காட்டி பூஜைகளை தடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு நேரடி ஒளிபரப்பு, பூஜைகள், அர்ச்சனைகள், அன்னதானம், பஜனைகள் நடத்த தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. .
தமிழ்நாடு அரசு கோவிலில் சிறப்பு பூஜை நடத்த தடை விதித்துள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறப்பு பூஜை, ராமர் கோவில் விழாவை ஒளிபரப்ப தடை செய்துள்ளது. அயோத்தி ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நேரலை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு உத்தரவிட கோரிய பாஜக சார்பாகவும், பாஜகவின் வினோஜ் பி செல்வம் சார்பாகவும் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.