fbpx

ராதிகாவை கட்டாயப்படுத்தி..!! இறுதியில் கல்லூரி மாணவியுடன்..!! நடிகர் சுதாகரின் தற்போதைய நிலை..!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று புகழப்படும் பாரதிராஜா, கிராமத்து கதைகளை உயிரோடு சினிமாவில் படைப்பதில் வல்லவர். இவர் அறிமுகம் செய்து வைத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் இன்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கின்றனர். அந்த வரிசையில் 1978ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடிகை ராதிகா மற்றும் நடிகர் சுதாகரை அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா தான்.

இந்நிலையில், தற்போது பத்திரிகையாளர் மற்றும் சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை ராதிகாவை வலுக்கட்டாயமாக காதலிக்க வேண்டும் என்று சுதாகர் கட்டாயப்படுத்தியதாக கூறியதோடு ராதிகாவை சுதாகர் தொடர்ந்து காதலித்ததாகவும் கூறி இருக்கிறார். ஆனால், ராதிகா சுதாகரை காதலிக்காததை அடுத்து ஜெயசித்ராவை காதலிப்பதாக கூறி சுதாகர் டார்ச்சர் செய்திருக்கிறார்.

மேலும் ஜெயசித்ரா தன்னை காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கட்டாயப்படுத்தியதோடு மட்டுமின்றி, ரோஜா பூவை கொடுத்து வலுக்கட்டாயமாக காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜெயசித்ரா கல்யாணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டதற்கு 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சுதாகர் கேட்டதாகவும், அதற்கு நான் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன். எல்லாம் உனக்குத்தானே என்று ஜெயசித்ரா சொன்னதாகவும் பல்வேறு விஷயங்கள் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.

ஆனால், கடைசியில் ஜெயசித்ராவையும் திருமணம் செய்து கொள்ளாமல், கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சுதாகர். தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவு மாறி இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Chella

Next Post

நண்பர்களுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி.! கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்.!

Tue Dec 26 , 2023
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி அவரது காதலன் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடும்பூர் ஊராட்சியில் டேங்கர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர் மாமல்லன். இவரது மனைவி மகாலட்சுமி. இந்நிலையில் மகாலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு […]

You May Like