சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த குரு குகன் (26). தனியார் டிவி இசை நிகழ்ச்சியில் பாடகராக பங்கேற்று பிரபலம் அடைந்தார். இந்நிலையில், இவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகாரில், ”பாடகர் குரு குகன் தனக்கு இசை நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமானார். சில நாட்களிலேயே தன்னை திருமணம் செய்து கொள்வதாக தன்னிடம் கூறினார். தனது பெற்றோரிடம் வந்து பேசுமாறு நான் கூறினேன். இதையடுத்து, குருகுகன் தனது பெற்றோரை சந்தித்து பேசினார்.
உங்கள் மகளை திருமணம் செய்து வைக்குமாறு குருகுகன் கூறியுள்ளார். இதையடுத்து, இருவரும் காதலித்து வந்தோம். திடீரென எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அப்போது, வீட்டில் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில், என் வீட்டிற்கு வந்த குருகுகன் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டார். பின்னர், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என என்னை சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து, தனது பெற்றோரை சம்மதிக்க வைக்க தாமதமாகிறது என கூறிவந்த குருகுகன், தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினேன். பின்னர், தன்னை வெளியில் அழைத்துச் செல்வதாக கூறி கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தார். தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என்று அந்த இளம்பெண் புகாரில் கூறியிருக்கிறார். புகார் தொடர்பாக பாடகர் குரு குகன் மீது பொய்யான உத்தரவாதம் கொடுத்து பாலியல் உறவு வைத்துக் கொள்வது, மிரட்டி அவமதித்து ஆதாரங்களை அழிப்பது மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பரங்கிமலை மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், குருகனை போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில், அவர் குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், பெருங்குடி பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாடகர் ஒருவர் இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் உறவு வைத்துக்கொண்டு கருக்கலைப்பு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : தூங்கச் செல்லும் முன் தலைமுடிக்கு எண்ணெய் வைக்குறீங்களா..? இந்த தொற்று ஏற்படுமாம்..!!