கள்ளக்காதலி வேறு ஒருவருடன் உல்லாசமாக இருந்ததால், கள்ளக்காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வம் (37). இவரின் மனைவி நித்யா (35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த கலைமணிக்கும் செல்வத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
![’ஜாலி செய்ய வந்த கள்ளக்காதலன்’..!! ’வேறொருவருடன் ஜாலியாக இருந்த கள்ளக்காதலி’..!! இறுதியில் நடந்த அதிர்ச்சி..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/Sex-1-e1668568953180.jpg)
இந்நிலையில், கலைமணி வேறு ஒருவருடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துள்ளார் செல்வம். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் கலைமணி அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று வருவதாக வெளியில் சென்ற நேரத்தில் செல்வம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கலைமணி திரும்பி வந்து பார்த்த போது தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில், இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![’ஜாலி செய்ய வந்த கள்ளக்காதலன்’..!! ’வேறொருவருடன் ஜாலியாக இருந்த கள்ளக்காதலி’..!! இறுதியில் நடந்த அதிர்ச்சி..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/Sex.jpg)
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கள்ளக்காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் செல்வம் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.