fbpx

மோசடி பத்திரம்..!! புதிய உத்தரவை பிறப்பித்தது பத்திரப்பதிவுத்துறை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

மோசடி பத்திரம் என்பது சொத்தின் உண்மையான உரிமையாளரை ஏமாற்றி சொத்தின் மீது எந்தவித உரிமையும் இல்லாத ஒரு நபர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்தால் அதுதான் மோசடி பத்திரம். போலியாக ஒரு உரிமை ஆவணத்தை உருவாக்கி, அதை அடிப்படையாக கொண்டு ஒரு சொத்துரிமையை மாற்றம் செய்தால், அந்த பத்திரமும் மோசடி பத்திரமாகும். இப்படி ஆள்மாறாட்டம், மோசடி காரணங்களுக்காகவே கடந்த 2021இல் தமிழ்நாடு அரசு பதிவு சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது.

இந்த திருத்தங்கள், 2022 ஆகஸ்ட் 16ஆம் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டன. அதன்படி, மோசடி புகார் குறித்து விசாரித்து, மாவட்ட பதிவாளரே அந்த பத்திரத்தை ரத்து செய்யலாம். இந்த விவரம் வில்லங்க சான்றிதழிலும் சேர்க்கப்படும் என்பதே அந்த திருத்தமாகும். இப்படிப்பட்ட சூழலில், பழைய நடைமுறைகளை சுட்டிக்காட்டி, மோசடி பத்திரங்களை ரத்து செய்ய கோரும் மனுக்களை, மாவட்ட பதிவாளர்கள் சிலர் தள்ளுபடி செய்கிறார்களாம்.

இப்படியொரு புகார் சமீபத்தில் தெரியவந்துள்ளது. மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால், மோசடி பத்திரங்கள் தொடர்பாக 1,100 புகார்களை ரத்து செய்திருப்பதாக பதிவுத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். இந்நிலையில், சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை, மாவட்ட பதிவாளர் ரத்து செய்வதை நிறுத்தி வைக்க, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்காக, பதிவு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள, 77A என்ற பிரிவை, முன் தேதியிட்டு அமல்படுத்தலாமா என்பது உள்ளிட்ட சில கேள்விகள், உயர்நீதிமன்ற கிளை எழுப்பியுள்ளது. சென்னை ஐகோர்ட்டிலும் சில கேள்விகள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக, அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மோசடி பத்திர புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்தலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மோசடி பத்திரங்கள் ரத்து தொடர்பான புகார்கள் மீதான விசாரணை உள்ளிட்ட, அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். நீதிமன்றத்தில் இறுதி முடிவு வரும் வரை, இந்த மனுக்களை விசாரிக்க வேண்டாம். 2022 ஆகஸ்ட் 16-க்கு முன் மற்றும் பின் பதிவான அனைத்து பத்திரங்களுக்கும் இது பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

துப்பாக்கியால் சுட்டு பிரபல தொழிலதிபர் தற்கொலை..!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!! என்ன காரணம்..?

Fri Oct 13 , 2023
கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க நகர தலைவரும், பிரபல தொழிலதிபருமான M.B. சுரேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. M.B. சுரேஷ், வெங்கடேஸ்வரா நகைக்கடை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார். இந்நிலையில், இவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுரேஷின் உடலைக் கைப்பற்றி […]

You May Like