fbpx

கள்ளக்காதல் விவகாரம்?… இளைஞர் மீது ஆசிட் வீசிய பெண்!… 50% தீக்காயங்களுடன் இளைஞருக்கு தீவிர சிகிச்சை!

ஈரோடு பவானி அருகே இளைஞர் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (26), இவர் பெருந்துறை உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இன்று மதியம் பெருந்துறையில் இருந்து வரும்போது காதல் பிரச்சினை காரணமாக தன் மீது தனது காதலி ஆசிட் வீசிவிட்டதாக கூறி தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். தொடர்ந்து முதல் உதவி சிகிச்சை பெற்ற இளைஞர் 50% தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆசீட் வீச்சு சம்பவம் எதற்காக நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை. மேலும் ஆசீட் வீசிய (திருமணம் ஆன பெண் என்று கூறப்படுகிறது)இளம்பெண்ணும் தலைமறைவாகி உள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் ஆசிட் வீச்சு சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தலைமைறைவாக உள்ள இளம்பெண்ணை தேடிவருகின்றனர்.

Kokila

Next Post

மாணவர்களே எச்சரிக்கை!... பொதுத்தேர்வில் தவறு செய்தால் 15வகை தண்டனை!... அரசு தேர்வுகள் துறை அதிரடி ரூல்ஸ்!...

Sun Mar 12 , 2023
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியலை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 13ம் தேதி திங்கட்கிழமை 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்க உள்ளன. மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்வு அறையில் மாணவர்கள் தவறு செய்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த […]

You May Like