fbpx

கள்ளக்குறிச்சி விவகாரம்..! அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கை பாயும்..! எஸ்பி எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்புக்கு உரிய விசாரணை கேட்டு அனுமதியின்றி அமைதி பேரணிக்கு முகநூலில் அழைப்பு விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் நகராட்சி துறை மங்கலத்தில் 8-வது வார்டு செயலாளர் சூர்யா. 9-வது வார்டு செயலாளர் தீபக், மற்றும் கம்பம் தெருவில் வசிக்கும் சுபாஷ் ஆகிய 3 பேரும் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு அமைதி பேரணி நடத்துவதற்கு அழைப்பு விடுத்து முகநூலில் பதவிட்டதாக தெரிகிறது. ஏற்கனவே வன்முறை வெடித்து, சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இந்த பதிவால் மேலும் கலவர சூழல் உருவாகும் என்பதால் அவர்கள் 3 பேரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

கள்ளக்குறிச்சி விவகாரம்..! அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கை பாயும்..! எஸ்பி எச்சரிக்கை

பின்னர் விசாரணைக்குப் பிறகு மூவரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோன்று உரிய அனுமதி பெறாமல் அழைக்கப்படும் போராட்டங்களில் பங்கேற்பவர்கள் மீது காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை பாயும் என்று பெரம்பலூர் எஸ்.பி. மணிசண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Chella

Next Post

பள்ளியின் மீது பல்வேறு சந்தேகம்..! முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்..! கே.எஸ்.அழகிரி

Mon Jul 18 , 2022
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுவதால், முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் மிகப்பெரிய கலவரத்திற்கு வித்திட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்2 படித்து வந்த மாணவி விடுதியின் 3-வது மாடியில் இருந்து […]
இன்னும் ஓரிரு நாளில் கனியாமூர் தனியார் பள்ளி அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு..?

You May Like