fbpx

விசித்திர சட்டம்.. மனைவியின் பிறந்தநாளை மறந்தால், 5 ஆண்டு சிறைத்தண்டனை.. எந்த நாட்டில் தெரியுமா..?

இந்த உலகில் பல நாடுகளில் பல விசித்திரமான சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.. அந்த வகையில் இந்த நாட்டில் மனைவியின் பிறந்தநாளை மறப்பது குற்றமாகும்.. அதற்காக முறையான சட்டமும் அங்கு இயற்றப்பட்டுள்ளது.. அதன்படி மனைவியின் பிறந்தநாளை மறக்கும் காணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கூட விதிக்கப்படலாம்.. சமோவா என்ற தீவு நாட்டில் இந்த விசித்திர சட்டம் பின்பற்றப்படுகிறது..

உலகின் அழகான தீவுகளில் சமோவாவும் ஒன்று.. அங்குள்ள விசித்திரமான சட்டங்கள் காரணமாக, அந்த அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகிறது.. மேலும் அங்கு சட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில் கணவன் தற்செயலாக தன் மனைவியின் பிறந்தநாளை மறந்துவிட்டால் அது பெரிய குற்றமாக கருதப்படுகிறது. ஒரு கணவர் தனது மனைவியின் பிறந்தநாளை முதல்முறையாக மறந்துவிட்டால், அவருக்கு எச்சரிக்கை கொடுக்கப்படும். அடுத்த முறை அதே தவறை மீண்டும் செய்தால் அபராதம் அல்லது சிறைக்கு செல்ல நேரிடும். ஒருவேளை மனைவி புகார் கொடுத்தால், கணவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

சமோவாவில் மட்டும் இதுபோன்ற விசித்திரமான சட்டங்கள் இல்லை. உலகில் பல நாடுகளில் இதுபோன்ற சட்டங்கள் உள்ளன.. பல்வேறு நூதன சட்டங்களுக்கு பெயர் போன வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் அணிந்து வெளியே சென்றால், அது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. அரச குடும்பத்தினரின் நினைவு நாளின் போது போது மக்கள் சிரிக்கவும், வெளியே செல்லவும், மது அருந்தவும் தடை விதிக்கப்படும்..

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜாகிங் செல்ல முடியாது, ஏனெனில் அது நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஓக்லஹோமா நாட்டில், ஒரு நாயைப் பார்த்து முகம் சுளித்தால், சிறை தண்டனை வழங்கப்படும்.. ஜெர்மனியில் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்துவிட்டால் அது சட்டப்படி குற்றமாகும்..

Maha

Next Post

இந்த ஆணவம் எல்லாம் இருக்க கூடாது...! பாஜகவினருக்கு அட்வைஸ் செய்த தெலுங்கானா முதல்வர்...!

Mon Feb 13 , 2023
குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை தடை செய்த நரேந்திர மோடி அரசின் மீது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கடுமையாக குற்றம் சாட்டினார், இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று கூறினார். கோதாரா கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிபிசி ஒளிபரப்பியபோது, அதற்கு தடை விதிக்கப்பட்டது. அஷ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் இந்தியாவில் பிபிசியை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏன் இந்த திமிர்?… “இந்தப் பைத்தியக்காரத்தனம் […]

You May Like