fbpx

எஸ்.பி.ஐ வங்கியின் நெட் பேங்கிங் யூஸர் ஐ.டி, கடவுச் சொல் மறந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்…

வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், வங்கி கிளைக்குச் சென்றுதான் பணப்பறிமாற்றம் செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது மாறியுள்ளது. அவ்வாறு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவைகளை, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி வழங்கி வருகிறது. இந்த ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்த, பயனர் ஐடி எனப்படும் (user name) மற்றும் கடவுச்சொல் (password) என்பது மிக முக்கியமாகும்.

ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் எஸ்.பி.ஐ வங்கியின் நெட் பேங்கிங் (Net banking) வசதிக்காக பதிவு செய்யும் போது, ​​அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட பயனர் ஐடி (user name) மற்றும் கடவுச்சொல் (password) வங்கியிலிருந்து தரப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் ஐடி மற்றும் பாஸ்வேர்டை அந்த வாடிக்கையாளார் மறந்துவிட்டால் என்ன செய்வது? கவலை வேண்டாம்.

கீழ்காணும் சில சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் பயனர் ஐடியை (User name)மற்றும் கடவுச்சொல்லை மீட்டெடுக்கலாம்.

பயனர் ஐடியை (User name) மீட்டெடுக்கலாம்!…

முதலில், onlinesbi.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்

பயனர் பெயர் மறந்துவிட்டால் (Forgot User name) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

பின்னர் உங்கள் பாஸ்புக்கில் அச்சிடப்பட்டுள்ள 11 இலக்க வாடிக்கையாளர் தகவல் எண் அதாவது (CIF) எண்ணை பதிவிடவும்

பின்னர் எந்த நாடு என்பதை தேர்ந்தெடுத்து, ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை டைப் செய்யவும்.

கீழே உள்ள கேப்ட்சா குறியீட்டை எழுதி விவரங்களைச் சரியாக டைப் செய்து விவரங்களை சமர்ப்பிக்கவும்.

இச்சமயத்தில் உங்கள் தொலைபேசிக்கு அனுப்பப்பட்ட ஒரு முறை கடவுச்சொல்லை அதாவது OTP எண்ணை பதிவிடவேண்டும்.

பின்னர் ‘Confirm’ என்ற பட்டனை கிளிக் செய்து உறுதி செய்யவும்.

இப்போது உங்கள் தொலைபேசியில் பயனர் ஐடியைப் (user name )பெறுவீர்கள்.

sbi

பாஸ்வேர்டு (password) மறந்துவிட்டால் என்ன செய்வது?

onlinesbi.com க்குச் சென்று மறந்துவிட்ட கடவுச்சொல் (Forgot password) என்பதைக் கிளிக் செய்யவும்.

பின்னர் அந்த பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பதிவிடவும்.

இப்போது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு புதிய கடவுச்சொல் (New password) அனுப்பப்படும்.

அந்த புதிய கடவுச்சொல்லுடன் உங்கள் வங்கி கணக்கை தற்போது பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் மாற்றிக்கொள்ளலாம்.

Kokila

Next Post

மறைந்த தலைவர்களுக்கு சிலைகள்.., "தவறான முன்னுதாரணம்" தடை விதிக்க வழக்கு..!

Sat Dec 24 , 2022
சென்னை டிபிஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஒட்டி, பள்ளிக் கல்வி இயக்குனரகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தில் அவரது சிலை அமைக்கப்படும் என நவம்பர் 30ம் தேதி அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சென்னை உயர் […]
’இந்த மாதிரி செய்தால் அது பலாத்காரம் ஆகாது’..!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

You May Like