fbpx

எல்லாம்.. சரி.. கடைசியில அதை மாத்த மறந்துட்டாரே… ஓபிஎஸ்-க்கு புதிய சிக்கல்..

பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.. இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்..

இதை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பு மாறி மாறி முறையிட்டுள்ளது.. இபிஎஸ் முடிவு பொதுக்குழு முடிவுகளை அங்கீரிக்க வேண்டும், ஓபிஎஸ் அதை அங்கீகரிக்க கூடாது என்று கூறியுள்ளது.. இந்த சூழலில் வரும் 17-ம் தேதி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது..

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ப.ரவீந்திரநாத், ப.ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 பேரை கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சியின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி, மருது அழகு ராஜ், வினுபாலன், அஞ்சுலட்சுமி, சைதை எம்.எம். பாபு, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், வைரமுத்து, அசோகன் ஆகியோர் நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார்..

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன் பங்கிற்கு 22 பேரை மேலும் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, வளர்மதி, சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார், ஓ.எஸ். மணியன் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்..

ஆனால் 22 பேர் நீக்கப்பட்டது குறித்து ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தேதி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தேதியில், 14.07.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. 2022 நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் தேதியை தவறாக குறிப்பிட்டிருப்பதால் இந்த அறிக்கை செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. சமூக வலைதளங்களில் ஓபிஎஸ் அறிக்கையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பலரும் இந்த அறிக்கை செல்லுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்..

Maha

Next Post

பழுதுபார்க்கும் உரிமைக்கான ஒட்டுமொத்த நடைமுறையை  உருவாக்க வேண்டும்...! மத்திய அரசு புதிய முயற்சி

Fri Jul 15 , 2022
நீடித்த நுகர்வு வாயிலாக சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை இயக்கத்தை வலியுறுத்தும் விதமாக, பழுதுபார்க்கும் உரிமைக்கான ஒட்டுமொத்த நடைமுறையை  உருவாக்குவதற்கான முக்கியமான நடவடிக்கையை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை மேற்கொண்டுள்ளது. உள்ளூர் சந்தையில் நுகர்வோர் மற்றும் பொருட்கள் வாங்குவோருக்கு அதிகாரமளித்து, அசல் சாதன உற்பத்தியாளர்கள், மூன்றாம் நபர் வாங்குவோர் மற்றும் வியாபாரிகள் இடையே, இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே பழுதுபார்க்கும் உரிமைக்கான நடைமுறை உருவாக்கப்படுகிறது. மேலும் பொருட்களின் நீடித்த நுகர்வோர் மற்றும் மின்னணு கழிவுகளை […]

You May Like