fbpx

Election: வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க 12- D படிவம் பூர்த்தி செய்ய வேண்டும்…!

பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் முதல் மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.‌தருமபுரி பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 181 வாக்குச்சாவடி மையங்களில் அடங்கியுள்ள 294 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாகவும், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி, மாற்றுதிறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வாக்களிக்க சாய்வுதளம், 85 வயது கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏதுவாக 12- D படிவங்கள் வழங்கும் பணி போன்றவைகள் குறித்தும், பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டறிந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் வைப்பறையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து உரிய பயிற்சியை வழங்க வேண்டும். இப்பயிற்சியின் மூலம் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எவ்வித சந்தேகங்கள் இன்றி முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பொருத்தப்படும் CCTV கேமராக்கள் உரிய பாதுகாப்போடு பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Vignesh

Next Post

Bank: மே 1-ம்‌ தேதி முதல் ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் வரும் அதிரடி மாற்றம்...!

Fri Mar 29 , 2024
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி, மே 1, 2024 முதல் அதன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய பலன்களில் மாற்றங்களைச் செயல்படுத்த உள்ளது. இந்த மாற்றங்கள் படி, மேக்னஸ் கடன் அட்டை, டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களை பாதிக்கும். மேலும் Burgundy டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, விமான நிலைய ஓய்வறைகளுக்கான இலவச சலுகை தகுதிபெற சில நிபந்தனைகள் இப்போது பொருந்தும். மே மாதத்திற்கு முந்தைய மூன்று […]

You May Like