fbpx

செந்தில் பாலாஜி பதவியில் நீடிக்க கூடாது….! உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனு….!

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் சார்பாக இந்த துறை சாக்கல் செய்த மனுவில் ஆளுநரின் விருப்பத்தின் பேரில் அமைச்சர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் செந்தில் பாலாஜி அமைச்சராக ஆளுநர் அங்கீகரிக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

அரசியலமைப்பு சட்டத்தின்படி அமைச்சரை நியமனம் செய்யும் மற்றும் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கின்ற நிலையில், ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் அமைச்சர்கள் குழுவில் தொடர்ந்து இருக்க இயலாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செந்தில் பாலாஜி கேபினட் அமைச்சராக அமைச்சராக இருக்கின்ற நிலையில், நீதிமன்ற காதலில் இருக்கும் போது ரகசிய கோப்புகளை அணுக முடியும் எனவும், இது ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிரானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி எந்த துறையிலும் அமைச்சராக இல்லாதபோதும் பொது கருஊழத்திலிருந்து பணம் செலவிடப்படுவது நியாயம் இல்லாதது என்றும், அந்த மனதில் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கூறும் இந்த மனு உயர் நீதிமன்றத்தில் மிக விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

விஜய்க்குப் பின்னால் இருக்கும் அந்த கை யாருடையது..? சந்தேகத்தைக் கிளப்பிய 'லியோ' போஸ்டர்..!!

Thu Jun 22 , 2023
கடந்த 2021ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தினுடைய  வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் ‘லியோ’ படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் விஜய் தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு […]

You May Like