சமீபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்த நாள் முதலே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் மோடி அமெரிக்கர் ஒருவருடன் செல்ஃபி எடுத்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசியல் பிரமுகரான டிம் பர்செட்,மோடியுடன் செல்ஃபி எடுத்துள்ளார், அந்த செல்ஃபியை ட்விட்டரில் “ஷேம்லெஸ் @narendramodi செல்ஃபி” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலமாகவும் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.
அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஷேம்லெஸ் என்ற வார்த்தையை வெட்கமற்றவர் என்று பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும், அமெரிக்க அரசியல் பிரமுகர் மோடியை அசிங்கப்படுத்தி விட்டதாகவும், அதை மோடி தன்னையும் அறியாமல் ரீட்வீட் செய்துள்ளதாகவும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஆனால், உண்மையில் ஷேம்லெஸ் செல்ஃபி என்ற வார்த்தைக்கு யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்வது என்று பொருள். இது சமூக ஊடகங்களில் ஒரு இயக்கம்.