fbpx

அதிரடி மாற்றம்…! மேற்கு வங்கத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்…! குடியரசு தலைவர் உத்தரவு…!

மேற்கு வங்க ஆளுநராக டாக்டர் சிவி ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கா் குடியரசு துணைத் தலைவராக கடந்த ஜூலை மாதத்தில் பதவியேற்றதைத் தொடா்ந்து, மணிப்பூா் மாநில ஆளுநா் இல. கணேசன் மேற்கு வங்க ஆளுநா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா்.

இந்த நிலையில் டாக்டர் சி.வி ஆனந்த போஸை மேற்கு வங்காளத்தின் ஆளுநராக நீ ஒரு செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இந்த நியமனம் அவர் தனது பதவியை பொறுப்பேற்ற நாளிலிருந்து அமலுக்கு வரும்” என்று குடியரசுத் தலைவரின் செய்திச் செயலாளர் அஜய் குமார் சிங் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1977 கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சி.வி. ஆனந்த போஸ், 2011-இல் தேசிய அருங்காட்சியகத்தின் நிா்வாக தலைவராக இருந்தாா். கேரள அரசிலும், மத்திய அரசிலும் பல்வேறு துறைகளில் சி.வி. ஆனந்த் போஸ் பணியாற்றி உள்ளாா். கொல்லத்தின் மாவட்ட ஆட்சியராகவும், கேரள முதல்வரின் செயலராகவும், மத்திய வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் செயலராகவும் அவா் பதவி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

விஜயகாந்த் படத்தில் முதல்வர் ஸ்டாலின் நடித்துள்ளாரா? வெளிவந்த புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!!

Fri Nov 18 , 2022
80ஸ் 90ஸ்களில் கொடிகட்டி பறந்த நடிகர், விஜயகாந்த் அவர்களுடன் ஒரு திரைப்படத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நடித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. நடிகர் விஜயகாந்திற்கென தனி பாணி உண்டு. கம்பீரமான உடல்வாகு அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் பொருத்தமாகிவிடுகின்றது. அனைவரும் அவரை கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திற்கு பின்னர் கேப்டன் என்றே அழைப்பார்கள். ஏராளமான திரைப்படங்களில் நடித்த இவர் பல கதாபாத்திரங்களில் பின்னி பெடலெடுத்துள்ளார். தற்போது இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் இன்றும் […]

You May Like