fbpx

கார் விபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் உயிரிழப்பு…!

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்த்ரி (54). இவர் மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ரக காரில் குஜராத்தில் உள்ள ஆமதாபாத் நகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பை நகர் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில், அவரது கார் சரோட்டி பகுதியருகே பாலம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது, மாலை 3.15 மணியளவில் சாலையின் நடுவே இருந்த பகுதியில் திடீரென மோதி விபத்துக்குண்டானது. இந்த விபத்தில் சைரஸ் மிஸ்த்ரி உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றொருவர் ஜஹாங்கீர் பின்ஷா பந்தோல் என தெரிய வந்துள்ளது.

அந்த காரில் மொத்தம் நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களில், விபத்தில் காயமடைந்த மற்ற இரண்டு பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

டாடாசன் குழுமத்தின் முன்னாள் தலைவர் விபத்தில் பலி... டிவைடரில் கார் மோதியதில் அப்பளம் போல் கார் நொறுங்கியது

Sun Sep 4 , 2022
டாடாசன் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரில் சென்ற மற்றொரு நபரும் பரிதாபமாக பலியானார். மும்பையில் டாடாசன் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ்மிஸ்ட்ரி. ,வெற்றிகரமாக இயங்கிய நிறுவனத்திற்கு மிக முக்கிய பங்கு வகித்தவர். இவருக்கு வயது 54 . மஹாராஷ்டிராவில் இருந்து மிஸ்ட்ரி உள்ளிட்ட 4 பேர் அகமதாபாத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பல்கர் பகுதியில்   சூர்யா ஆற்றின் பாலத்தை […]

You May Like