இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங். இவருக்கு சொந்தமான ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவின் எம்டிஏசெக்டாரில் உள்ள வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் திருடுபோய் உள்ளது.
இதுபற்றி யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், வீட்டு வேலை செய்து வந்த லலிதா தேவி மற்றும் பீகாரைச் சேர்ந்த சமையல்காரர் சில்தார் பால் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.