ஹரியானா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளம் (INLD) தலைவருமான ஓம் பிரகாஷ் செளதாலா, இன்று காலமானார். அவருக்கு வயது 89. ஓம் பிரகாஷ் செளதாலா குருகிராம் வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து வரவு உடனடியாக மருத்துவமணிக்கி கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆனால் அவரை காப்பாற்ற முடையவில்லை என்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 6வது துணைப் பிரதமர் “சவுத்ரி தேவி லாலின்” மகன் தான் இந்த ஓம் பிரகாஷ் செளதாலா. இவர் 2 டிசம்பர் 1989 முதல் 22 மே 1990 வரையிலும், 12 ஜூலை 1990 முதல் 17 ஜூலை 1990 வரையிலும், மீண்டும் 22 மார்ச் 1991 முதல் 6 ஏப்ரல் 1991 வரையிலும் என மூன்று முறை குறுகிய கால முதல்வராக பணியாற்றியுள்ளார். பின்னர் 24 ஜூலை 1999 முதல் மார்ச் 5, 2005 வரையிலும் ஹரியானாவின் முதலமைச்சராகப் முழுமையாக பணியாற்றினார்.
ஜூன் 2008 இல், ஓம் பிரகாஷ் செளதாலா மற்றும் 53 பேர், 1999-2000 காலகட்டத்தில் ஹக்ரியானாவில் 3,206 ஜூனியர் அடிப்படை ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டனர். பின்னர் ஜனவரி 2013 இல், டெல்லி நீதிமன்றம் செளதாலா மற்றும் அவரது மகன் அஜய் சிங் செளதாலா ஆகியோருக்கு ஐபிசி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனையடுத்து அவர் 10 ஆண்டு சிறைத்தண்டனையுடன் 9½ ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் ஜூலை 2, 2021 அன்று திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். COVID-19 தொற்றுநோயை நிர்வகிக்க சிறைகளுக்குள் மக்கள் தொகையைக் குறைக்க டெல்லி அரசாங்கத்தின் முடிவின் காரணமாக அவர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்.
பின்னர் 2022ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதன் மூலம், 87 வயதில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட மூத்த கைதியானார் ஓம் பிரகாஷ் செளதாலா.
முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு, அபய் சிங் சவுதாலா மற்றும் அஜய் சிங் சவுதாலா உட்பட இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இவரது பேரன் துஷ்யந்த் சிங் சவுதாலா ஹரியானா மாநிலத்தின் துணை முதல்வராகவும், ஹிசார் தொகுதியின் முன்னாள் மக்களவை எம்.பி.யாகவும் பணியாற்றியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தொண்டர்கள் என் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.