fbpx

Flash..! அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஜாமீன்…!

100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஜாமீன் வழங்கியது கரூர் நீதிமன்றம்.

கரூரில் 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து பத்திரப் பதிவு செய்ததாக 7 பேர் மீது, கரூர் நகர காவல் நிலையத்தில் கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கடந்த மாதம் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் எனக் கருதி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலை மறைவானார்.

தனக்கு முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மனு தாக்கல் செய்தனர். ஆனால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை கேரளா மாநிலம் திருச்சூரில் சிபிசிஐடி போலீஸார் கடந்த 16-ம் தேதி கைது செய்தனர்.

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஜாமீன் வழங்கியது கரூர் நீதிமன்றம்.

English Summary

Former Minister MR. Karur court granted bail to Vijayabaskar.

Vignesh

Next Post

வந்தது அலர்ட்... இந்த மாவட்டத்தில் வெளுத்து வாங்க போகுது கனமழை...! எல்லாம் உஷார்..!

Wed Jul 31 , 2024
Heavy to very heavy rain is likely at one or two places over the hilly areas of Nilgiris and Coimbatore

You May Like