வங்கதேச நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சிக்குத் தலைமை வகித்தவர் தான் கலீதா ஜியா. இவர், பிரதமராக பதவி வகித்தவரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனாவை தீவிரமாக எதிர்த்து வந்தார். இதனால், கடந்த 2018ஆம் ஆண்டு டாக்கா சிறையில் அடைக்கப்பட்டார். ஊழல் வழக்கு ஒன்றில் கலீதாவுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவருக்கு 78 வயது ஆகியுள்ளது. வயது மூப்பு மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரை சிறையில் இருந்து விடுவிக்க அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீன் உத்தரவிட்டார். இதையடுத்து, வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், கலீதா ஜியா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், கலீதா ஜியா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு உடல்நலப்பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இன்று காலை அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களும் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Read More : செம குட் நியூஸ்..!! ஆதாரை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!